விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!

0
77

விவசாயிகள் மற்றும் விவசாயத் துறை வல்லுனர்கள் பல சங்கப் பிரதிநிதிகளை கலந்தாலோசித்து மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் பயனளிக்கக் கூடிய விதத்தில் இந்த வருடம் நிதிநிலை அறிக்கையும், விவசாய துறைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கையும், அமைய வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் தமிழக அரசு இந்த வருடம் இரண்டு நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. தமிழக அரசு வரலாற்றில் முதல்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கை உடன் சேர்த்து வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சார்பாக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது தமிழக அரசு என்று சொல்லப்படுகிறது.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிதிநிலை அறிக்கையை விவசாயிகள் விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் உள்ளிட்டோரை கலந்து ஆலோசித்து அதன் பிறகு விவசாயம் மேம்படவும், விவசாயிகளின் உழைப்பிற்கு ஏற்ற பயன்களை கொடுக்கும் வகையிலும், சிறந்த திட்டங்களை உள்ளடக்கிய தயாரிக்கவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும், அறிவுறுத்துகின்றார்.

அதோடு பொது நிதிநிலை அறிக்கையை பொருளாதார மற்றும் நிலை வல்லுநர்கள், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை கலந்தாலோசித்த பின்னர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையாக தமிழக மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய வளர்ச்சியை ஏற்படுத்தும் விதத்திலும், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் விதத்திலும், சிறந்த நிதிநிலை அறிக்கையை தயாரிக்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.