Breaking News

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ள மோடியின் “பக்கா ஸ்கேட்”!!

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ள மோடியின் “பக்கா ஸ்கேட்”!!

நேற்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திரமோடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்’எம் மண் எம் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் கலந்துக்கொண்டு கூரையாற்றினார், அதனை தொடர்ந்து இன்றும் அரசின் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைக்கயுள்ளார்.

இன்று மாலை டெல்லி திரும்பும் பிரதமர் வருகின்ற மார்ச் நான்காம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் வருகின்ற மார்ச் நான்காம் தேதியில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள பாஜகவினரின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுவார் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி பாஜகவை முன்னிறுத்த பாஜகவினரும், மோடியும் தீவிர ஈடுபாடு காட்டி வருகின்றனர் அதன் வெளிபாடே மோடியின் தொடர் தமிழக பயணம் என அரசியல் வட்டம் கூறுகிறது.