வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்!! பத்தாம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்!!
அடிக்கடி தாயார் வீட்டு வேலை செய்யுமாறு கூறியதால் மனம் உடைந்த பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார்.
திருவள்ளுவர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் என்ற ஊரின் அருகே உள்ள புதுப்பட்டு கிராமம் புதிய காலனியில் வசித்து வருபவர் சபாபதி வயது 42. இவர் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கவியரசு என்ற மனைவியும், ராகேஷ் வயது 16, சஞ்சித் வயது 12, என்று இரு மகன்களும் தர்ஷினிதா வயது 15, என்ற மகளும் உள்ளனர். கவியரசி அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
ராகேஷ் 12 ஆம் வகுப்பும், சஞ்சித் 7-ஆம் வகுப்பும் தர்ஷினிதா 10-ஆம் வகுப்பும் பண்ணூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதியில் சபாபதி வேலை நிமித்தம் காரணமாக அலுவலகத்தில் தங்கியுள்ளார். மேலும் 5-ஆம் தேதி காலை கவியரசி வீட்டில் கூழ் ஊற்ற வேண்டும். எனவே வீட்டை சுத்தம் செய்து வைக்க வேண்டும் என்று தனது மகளிடம் கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
மேலும் விளையாடுவதற்கு வெளியே செல்லக்கூடாது எனவும் கண்டித்துச் சென்றுள்ளார். எனவே மாலையில் பள்ளி முடிவு திரும்பிய மூன்று பேரும் வீட்டினை சுத்தம் செய்ய முயன்றனர். அப்போது தர்ஷினிதா தனது சகோதரர்களிடம் வீட்டை தான் சுத்தம் செய்வதாகவும், நீங்கள் இருவரும் விளையாட செல்லுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் சகோதரர்கள் இருவரும் வெளியே சென்றதும் தாய் அடிக்கடி வீட்டு வேலை செய்ய வற்புறுத்தி வருவதால் மனம் விரக்தியில் இருந்த தர்ஷினிதா கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு படுக்கை அறைக்குச் சென்று அங்கு மின்விசிறியில் இருந்த கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதன் பின்னர் விளையாடிவிட்டு வந்த சகோதரர்கள் இருவரும் வீட்டுக் கதவை திறக்க முயன்ற போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் இருவரும் ஜன்னல் வழியாக பார்த்த போது தர்ஷினிதா தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுது துடித்தனர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று தர்ஷினிதா உடலை மீட்டனர். பின்னர் இந்த தற்கொலை குறித்து மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ, சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகிறார் வீட்டு வேலை செய்ய தாய் வற்புறுத்தியதால் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.