நாக்கில் எச்சில் ஊறும் அன்னாச்சிப்பழ அல்வா – சுவையாக செய்வது எப்படி?

0
98
#image_title
நாக்கில் எச்சில் ஊறும் அன்னாச்சிப்பழ அல்வா – சுவையாக செய்வது எப்படி?
அன்னாச்சிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறையும். மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றும். இதய நோய் வராமல் பாதுகாக்கும். அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவி செய்யும்.

சரி அன்னா பழத்தை வைத்து எப்படி அன்னாச்சி அல்வா செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

சர்க்கரை – 1 கிலோ

மைதா – 150 கிராம்

நெய் – 150 கிராம்

நன்கு பழுத்த அன்னாசி – பாதி

முந்திரி – 30 கிராம்

ஏலக்காய் தூள் – சிறிதளவு

மஞ்சள் – சிறிதளவு

செய்முறை

முதலில் அன்னாசி பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் அன்னாச்சி துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் பின்னர், மைதாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை பாகு காய்ச்ச வேண்டும். நூல் பதம் வந்த பிறகு அதில் கரைத்து வைத்துள்ள மைதாவை அதில் ஊற்றி கிளற வேண்டும். கெட்டியாக வரும் போது நெய்யை சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

சிறிது வண்ணப்பொடியை, ஏலக்காய் தூள், அன்னாசி ஜூஸ், ஏலக்காய் தூள், அன்னாசி துண்டுகளை அதில் சேர்த்து கரண்டியில் ஒட்டாத அளவுக்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
நெய் மேலே திரண்டு வரும்போது, வறுத்த முந்திரியை அதில் சேர்த்து
இறக்கினால் சுவையான அன்னாச்சிபழ அல்வா ரெடி.
Previous articleஇந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!!
Next articleதொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?