எச்சில் ஊறவைக்கும் கார தோசை.. இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!!
நம்மில் பெரும்பாலானோருக்கு தோசை பிடித்தமான உணவாக இருக்கிறது.அதிலும் கார தோசை என்றால் உயிர் என்று பலர் கூறி கேள்வி பட்டிருப்போம்.இப்படி நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த தோசை ரெசிபியை கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களை வைத்து செய்தோம் என்றால் இதற்கு சட்னியோ,குழம்போ இல்லாமல் கூட சுவைக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரசி – 3 கப்
துவரம் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1 கப்
உளுந்து பருப்பு – 2 ஸ்பூன்
சோம்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 சிறு துண்டு
வரமிளகாய் – 10
கல் உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
1.ஒரு பாத்திரம் எடுத்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
2.பிறகு இட்லி,தோசைக்கு மாவு அரைப்பதை போல் இவற்றை அரைத்து கொள்ள வேண்டும்.
3.அந்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும்.
4.பிறகு பெரிய வெங்காயம் ஒன்று நறுக்கியது,கொத்தமல்லி இலை 1 கைப்பிடி அளவு மற்றும் தேங்காய் சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
5.அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடேறியதும் மாவை ஊற்ற வேண்டும்.பிறகு அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,கொத்தமல்லி,தேங்காய் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
6.இந்த தோசைக்கு சைடிஷ் தேவைப்படாது என்றாலும் கடலை சட்னி காமினேஷன் இதன் சுவையை மேலும் கூட்டும்.