திரும்ப திரும்ப சாப்பிட  தூண்டும் சுவையான சிவப்பு அவல் பாயாசம் – செய்வது எப்படி ?

0
48
#image_title

திரும்ப திரும்ப சாப்பிட  தூண்டும் சுவையான சிவப்பு அவல் பாயாசம் – செய்வது எப்படி ?

சிவப்பு அவல் நன்மை

விலை மலிவாக கிடைக்கும் சிவப்பு அவலில் ஏராளமான நன்மைகள் உள்ளன. சிவப்பு அவல் சுவையூட்டும் உணவாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அரிசிக்கு பதிலாக இந்த சிவப்பு அவலை எடுத்துக் கொள்ளலாம். அவலில் உருண்டை, அவல் உப்புமா, அவல் லட்டு, பால், நெய், தேங்காய்த் துருவல் சேர்த்த ஊட்டச்சத்துள்ள ஸ்நாக்ஸ் என பல ரெசிபிக்கள் உண்டு.

மேலும், சிவப்பு அவலில் நார்ச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும், வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து உட்பட பல சத்துக்களை கொண்டுள்ளது. பட்டை தீட்டப்படாத அரிசியில் இருந்து தயாரிக்கபடுவதால் இது சத்து நிறைந்தது. இவை உடலுக்கு பல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

சரி அவலை வைத்து எப்படி அவல் பாயாசம் செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

அவல் – 2 கப்
பால் – 4 கப்
வெல்லம் – 1 கப்
முந்திரிப்பருப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
உப்பு – ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள்  – சிறிதளவு

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி, அதில், முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்னர், அதே பாத்திரத்தில் அவலை சேர்த்து மிதமான சூட்டில் அவலை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர், அந்த அவலுடன் பாலை சேர்த்து நன்றாக வேக விட வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவல் பாலுடன் சேர்ந்து நன்கு வெந்தவுடன் வடிகட்டி வைத்துள்ள வெல்லக் கரைசலை சேர்த்து கலந்து நன்றாக கிளற வேண்டும்.
இதன் பின்னர், அதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரியை சேர்த்து இறக்கினால் சுவையான அவல் பாயாசம் ரெடி.

author avatar
Gayathri