News, Breaking News, Education, State

எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்பு கால அவகாசம் நீட்டிப்பு!! தமிழக அரசு அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்பு கால அவகாசம் நீட்டிப்பு!! தமிழக அரசு அறிவிப்பு!!

CineDesk

Button

எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்பு கால அவகாசம் நீட்டிப்பு!! தமிழக அரசு அறிவிப்பு!!

கடந்த ஜூன் மாதம் 28  ஆம் தேதி முதல் இந்த மாதம் பன்னிரெண்டாம் தேதி வரை 2023-2024  கல்வியாண்டிற்கான மருத்துவப் படிப்பு மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தது.

இதற்கான தரவரிசை பட்டியல் இந்த மாதம் பதினாறாம் தேதி அன்று வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டில் உள்ள மணாவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த 27  ஆம் அன்று நடைபெற்றது.

மேலும், அரசு பள்ளியில் படித்த மணாவர்களுக்கான 7.5  சதவிகித உள் ஒதுக்கீடு கலந்தாய்வும் கடந்த 27  அன்றே நடைபெற்றது. இந்த கலந்தாய்வானது சென்னையில் உள்ள கிண்டியில், கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்து முடிந்தது.

தற்போது இந்த மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்ய வருகின்ற ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் மாணவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீடு குறித்து வெளியிடப்படும். இதற்கான முடிவுகள் அடுத்த நாளான ஆகஸ்ட் ஆறு அன்று வெளிவரும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாணவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு அதனை பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி முதல் பதினோராம் தேதி வரை கல்லூரியில் அட்மிஷன் போட வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!! பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்!!

மக்களே உஷார் இன்னும் 2 நாட்கள் மட்டும்!! வருமான வரித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!