முகேன் ராவ் உடன் ஜோடி சேர உள்ள சின்னத்திரை நடிகை!

0
163

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்னும் ரியாலிட்டி ஷோ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இந்த ஷோ 3 சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசனும் தொடர உள்ளது. அதுவும் கடந்த சீசன் 3 இல் பங்குபெற்ற அனைவரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றனர் . அவ்வகையில் தர்ஷன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று எண்ணிய நிலையில் திடீரென்று முகின்ராவ் பட்டத்தை தட்டிச்சென்றார். வெகுளியான இளைஞராக வந்து எந்த சுயநலமும் இன்றி அன்போடு பழகும் வகையில் அவரது பாத்திரம் மக்கள் மனதில் பதிந்தது.

அதோடு மட்டுமல்லாமல் அவர் நல்ல திறமைசாலிகள் ஆவார். நடிகர், பாடகர்,நடனம் ஆடுபவர்,பாடல் வரிகளை எழுதுபவர் என்று பன்முகம் கொண்ட திறமையாளர் ஆவார். “அன்பு ஒன்றுதான் அனாதை” என்னும் ஒரு வாசகத்தால் உலக தமிழ் மக்களையே அவர் தன் வசம் கொண்டார். இவர் ஒரு மலேசியா வாழ் தமிழர் ஆவார்.

முகேன் ராவ் தற்பொழுது ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.இதனை கே.புரடெக்ஷன் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகை திவ்யா பாரதி நடிக்க உள்ளார். இவர் ஜி.வி.பிரகாஷ் உடன் “பேச்சிலர்” எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இப்படம் இன்னும் வெளிவரவில்லை.
மேலும் இப்படத்தில் முகேன் ராவுக்கு ஜோடியாக நடிகை ஷிவானி நாராயணன் நடிக்க உள்ளார். சின்னத்திரையில் சீரியல்களில் வலம் வந்த நடிகை ஷிவானி தற்பொழுது திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.


சமீபகாலமாக இவர் கவர்ச்சி படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சமூக ஊடகங்களில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவர் சமூக ஊடங்களில் மிகவும் அப்டேட் ஆக உள்ள நிலையில் அவருக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

Previous articleபுற்றுநோய்த் தலைநகரமாகும் சென்னை: புகையிலை மதுவை ஒழிக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
Next articleதமிழக அரசு அறிவித்த அதிரடி தளர்வு!