உங்கள் மேனியை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும்.. முல்தானிமட்டி சோப்..! இதை எவ்வாறு தயார் செய்வது?

Photo of author

By Divya

உங்கள் மேனியை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும்.. முல்தானிமட்டி சோப்..! இதை எவ்வாறு தயார் செய்வது?

உடலில் ஏற்படும் கொப்பளம், கரும் புள்ளிகள், வறட்சி, கருமை… உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்க முல்தானிமெட்டி சோப் பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)முல்தானி மெட்டி பவுடர் – 2 தேக்கரண்டி
2)சோப் பேஸ் – 1 கப்
3)ரோஸ் வாட்டர் – 2 தேக்கரண்டி
4)தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
5)சோப் மோல்ட் – 1

முல்தானி மெட்டி சோப் தயாரிக்கும் முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதன்மேல் ஒரு பாத்திரம் வைத்து சோப் பேஸ் சேர்க்கவும். டபுள் பாய்லிங் மெத்தட் படி சோப் பேஸை கொதிக்க விடவும்.

சோப் பேஸ் நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும். பிறகு அதில் 2 தேக்கரண்டி முல்தானி மெட்டி, 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

சோப் பேஸில் சேர்த்த அனைத்து பொருட்களும் நன்கு கரைந்த பின்னர் ஒரு சோப் மோல்டில் அதை ஊற்றவும்.

இதை நிழலில் 3 மணி நேரம் காய வைக்கவும். பிறகு ப்ரிட்ஜில் ப்ரீஸரில் 3 மணி நேரம் வைக்கவும். இந்த முல்தானி மெட்டி சோப்பை உடலுக்கு பயன்படுத்தி வந்தால் சில தினங்களில் உடல் மிருதுவாகவும், பொலிவாகவும் மாறத் தொடங்கும்.