லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் – மனைவி விஜயா பேட்டி!

Photo of author

By Savitha

லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் – உயிரிழந்த சிறைக் காவலர் ராஜாவின் மனைவி விஜயா பேட்டி.

சிறை காவலராக பணியாற்றிய எனது கணவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்த காரணத்தினால் கடந்த ஆறு மாதமாக மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனையின் காரணமாக காவல் நிலையத்தை நாடிய போது எனது கணவருக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது.

எனது கனவரின் தம்பி மகள் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு முறையாக விசாரணை செய்யாமல் எங்கள் வீட்டுக்காரரை காவல் நிலையத்தில் மிகவும் அசிங்கப்படுத்தி ஜட்டியுடன் அமர வைத்து – காவலர்
ஷு காலால் உதைத்தன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான எனது கணவர் தீக்குளித்தார்.

எனக்கும் எனது கணவருக்கும் மகள் முறை வேண்டும் எனது கொழுந்தனாருடைய மகள். அப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு எனது கணவரிடம் காவல் துறையினர் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டுள்ளனர்.