என்டி ராமராவின் நூற்றாண்டு விழாவில் ரஜினி பேச்சு!!

0
121
#image_title

என்டி ராமராவின் நூற்றாண்டு விழாவில் ரஜினியின் பேச்சு.

மேடை மீது அமர்ந்திருக்கும் பெரியோர்களுக்கும், தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் நட ரத்னா பத்மபூஷன் தாரக ராமா ராவின் வாரிசுகளுக்கும் எனது சகோதரர் பாலகிருஷ்ணா விற்கும் மூத்த பத்திரிகையாளர் நாராயண அவர்களுக்கும் மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்களுக்கும் விழாவை காண வந்த பொதுமக்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

நான் இவ்வளவு பெரிய மேடைகளில் தெலுங்கு பேசி பல நாட்கள் ஆகிவிட்டது. ஆகையால் எனது தெலுகு உச்சரிப்பில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளவும். புத்தி சொல்கிறது என்ன பேச வேண்டும் என்று சாமர்த்தியம் சொல்கிறது எதைப் பேச வேண்டும் என்று சபை சொல்கிறது எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று அனுபவம் சொல்கிறது எதைப் பேச வேண்டும் எதைப் பேசக்கூடாது என்று இந்த சபையில் இருக்கும் கட்சி கொடிகளுடன் மக்களை பார்க்கும்போது அரசியல் பேச வேண்டும் என்று சொல்கிறது.

ஆனால் அனுபவம் சொல்கிறது வேண்டாம் ரஜினி என்று ஆனால் என்னுடைய நண்பர் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இருக்கும்போது அரசியல் பேச விட்டால் நாகரிகமாக இருக்காது.

அரசியல் பேசினால் இங்குள்ள பத்திரிகைகள் ஏதேதோ ஜோடித்து விடுவார்கள். சந்திரபாபு நாயுடு 30 ஆண்டுகளாக நட்பில் இருக்கிறார். என்னுடைய மற்றொரு நண்பர் மோகன் பாபு இவருடன் நட்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

மோகன் பாபு அப்போது கூறுகையில் இவர் மிகப்பெரிய அரசியல்வாதியாக வருவார் என கூறினார். ஹைதராபாத் வரும்போதும் எல்லாம் சந்திரபாபு நாயுடுவை சந்திப்பது வழக்கம் அவருடன் பேசும் போதெல்லாம் புத்தி கூர்மையாகிறது அவரின் தொலைதூரப் பார்வை தெரிகிறது. 24 மணி நேரமும் மக்களுக்கு நல்லது செய்வதையே யோசித்துக் கொண்டிருப்பார்.

இந்திய அரசியல் மட்டுமல்ல அது உலக அரசியலும் அவருக்கு தெரியும். அவர் ஒரு தீர்க்கதரிசி நான் கூறுவது மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெரிய பெரிய அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

அவருடைய டேலண்ட் இங்கு இருக்கிறவர்களை தவிர வெளியே இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். அவருடைய தொலைதூர பார்வைக்கு எடுத்துக்காட்டாக 19 96- 97 சொன்னார். விஷன் 20 20 என்று ஐ டி தொழில் மேலோங்கும் என்று அது மட்டுமல்ல ஹைதராபாத் சிட்டியை ஹைடெக் சிட்டியாக மாற்றி பில்கேட்ஸை போன்ற தொழிலதிபர்கள் இங்கே வந்து வாழ்த்தி சென்றனர்.

அவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென கடவுளை வேண்டிக் கொள்கிறேன். என்னுடைய மற்றொரு நண்பர் கண் பார்வையாலே கொன்றுவிடுவார்.

ஒரு உதயிலையே 20 அடி தூரத்திற்கு ஜிப்பை பறக்க விடுவார். ரஜினிகாந்த் இல்லை அமிதாப்பச்சன் இல்லை ஷாருக்கான் இல்லை யார் இந்த வேலையை செய்தாலும் மக்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பாலகிருஷ்ணா செய்தால் ஒத்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர் என்டி ராமராவ் மகன் பெரிய கோவக்காரர்.

மனது பால் போன்றது அவர் நீடுழி காலம் சினிமாவிலும் அரசியலிலும் இருக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறேன். நான் முதல் முதலில் திரைப்படத்தை பார்த்தது பாதாள பைரவி 1956 57 களில் அப்புடு 20 அடி பைரவி சிலையை பார்த்து பிரமித்து போய் எப்போதும் பைரவி பைரவி என்று இருந்தேன்.

என்னுடைய முதல் படம் அபூர்வராகங்கள் எடுத்த போது என்னுடைய முதல் படப்பின் போது முதல் வசனம் பைரவி வீடு இதுதானா என்று தொடர்ந்து வில்லன்களாகவும் இணை நடிகர்களாகவும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் என்னை ஹீரோவாக புக் செய்ய வந்தனர்.

ஆனால் எனக்கு ஹீரோவாக பிடிக்கவில்லை. ஏனென்றால் வில்லன் வில்லன் நடிப்பு இணை நடிகர்கள் நடிப்பு தொடர்ந்து எனக்கு நான்கு நாட்கள் ஐந்து நாட்கள் வந்து கொண்டே இருக்கும்.

நன்றாக பாட வரும் எதற்காக இந்த ஹீரோ அதுக்கு பொறுப்பு தேவைப்படும் என்பதால் மறுத்து ஒதுக்கினேன். ஆனால் இயக்குனர் என்னை விடவில்லை. இந்த கதையை கேட்டு பாருங்கள் என கதையை கூறினார்.

அந்த படத்தின் பெயர் தான் பைரவி. ஹீரோவாக எனது முதல் படம் பைரவி தான். இந்த வார்த்தை தந்தது கடவுள் பைரவி ஜெகன் மாதா தாய். என்டி ராமராவினை முதல் முதலாக 1963 லவகுசா படம் வெளிவந்த போது மினர்வா தியேட்டரில் முதல் முதலில் சிறு வயதில் பார்த்தேன். தொடர்ந்து அவருடைய படங்களை பார்த்து தெலுங்கு கற்றுக் கொள்ள முயற்சித்தேன்.

எனது 18 வது வயதில் பேருந்து கண்டக்டராக பணியை தொடர்ந்தபோது ஆண்டு விழா நடக்கும்போது மேடை நாடகங்களில் குருசேத்ரா நாடகத்தில் துரியோதனன் வேடத்தில் நடித்தேன்.

அப்போது என் டி ராமராவை மனதில் வைத்து அவரைப் போலவே நடித்தேன். அந்த நாடகத்தை பார்த்த எனது நண்பர்கள் ஊக்கப்படுத்தினர். நீ நடிகனாக ஆகு என்று இதன் காரணமாகவே சென்னையில் உள்ள பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து பயின்றேன்.

தொடர்ந்து 1977 என்டி ராமராவ் உடன் இணைந்து டைகர் என்ற படத்தில் நடித்தேன். அப்போது என்டி ராமராவ் அவர்கள் செட்டிற்கு காலையில் ஆறு முப்பது மணிக்கு வந்து விடுவார். இதனால் அந்த செட் அனைத்துமே மௌனமாகிவிடும் என்று பல்வேறு ஞாபகங்களை நினைவு படுத்தி பேசினார்.

author avatar
Savitha