நகங்களுக்கு நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள் இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்!

Photo of author

By Divya

நகங்களுக்கு நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள் இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்!

பெண்கள் தங்கள் கை மற்றும் கால் நகங்களை அழகாக வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார்கள். இதற்காக பார்லர் சென்று அதிக செலவு செய்து நகங்களை அழகுபடித்துக் கொள்ளும் பெண்கள் நகங்களுக்கு மேலும் அழகு சேர்க்க நெயில் பாலிஷ் என்ற வேதிப்பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

நெயில் பாலிஷ் ரெட், ஆரஞ்சு, வைட் என்று ஏகப்பட்ட நிறத்தில் அதன் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. நெயில் பாலிஷ் நகங்களை அழகு படுத்தும் வேதிப் பொருளாக இருக்கின்றது.

ஆனால் இந்த நெயில் பாலிஷ் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒன்றாக இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

நெயில் பாலிஷை விசேஷ நாட்களில் அல்லது எப்பொழுதாவது ஒருமுறை பயன்படுத்தினால் அவ்வளவு ஆபத்து கிடையாது.

ஆனால் அடிக்கடி நெயில் பாலிஷ் பயன்படுத்தினால் நகங்கள் பலவீனமாகும். விரைவில் உடைந்து விழுந்து விடும்.

நெயில் பாலிஷில் இருந்து வரும் வாசனை சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த கெமிக்கல் வாசனை மூளையின் செயல்பாட்டை கூட பாதித்துவிடும்.

நெயில் பாலிஷில் சேர்க்கப்படும் பார்மல்ஹைடு என்ற வேதி பொருள் புற்றுநோய் பாதிப்பை உண்டாக்கும்.

நகங்களுக்கு நெயில் பாலிஷ் பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை பொருட்களான மருதாணியை பயன்படுத்தினால் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். நகங்கள் பளபளப்பாக இருக்க தேங்காய் எண்ணெயை அப்ளை செய்து வரலாம்.