மழை காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு! இதை சரி செய்ய சுக்கை இப்படி பயன்படுத்துங்க!!
மழை காலத்தில் நமக்கு ஏற்படும் மூக்கடைப்பு பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த பதிவில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மழைகாலம் வந்தால் நமக்கு சளி, இருமல் பிரச்சனை ஏற்படும். இதனால் மூக்கடைப்பு ஏற்படும். இந்த மூக்கடைப்பு பிரச்சனை நமக்கு மூச்சுத் திணறல் பிரச்னையை ஏற்படுத்தும். மேலும் இரவில் தூக்கம் வராது. இந்த மூக்கடைப்பு பிரச்சனையை சரி செய்ய சுக்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்…
* சுக்கு
* பால்
* சர்க்கரை
தயார் செய்யும் முறை…
* முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி அதில் சுக்கு போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.
* சுண்ட காய்ச்சிய பிறகு இதில் பால் சேர்த்து குதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதில் சர்க்கரை சேர்த்து குதிக்க வைத்து இறக்க வேண்டும். சர்க்கரைக்கு பதிலாக தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்ப்பது இன்னும் பலன் கொடுக்கும்.
* பால் கொதித்த பிறகு இறக்கினால் மூக்கடைப்பு பிரச்சனையை சரிசெய்யும் மருந்து தயார்
இந்த மருந்தை தினமும் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலைகளில் இந்த பாலை தயார் செய்து குடித்து வந்தால் மூக்கடைப்பு பிரச்சனை சரியாகி விடும்.
சுக்கை நாம் பயன்படுத்தி வரும் பொழுது நம் உடலில் ஏற்படும் தலைவலி, இருமல், போன்ற நோய்களும் குணமாகும். மேலும் என்றும் இளமையாக இருக்க நாம் சுக்கை சேர்த்துக் கொள்ள வேண்டும்.