Natural Face Pack: உங்கள் முகம் நிமிடத்தில் பொலிவாக இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தி பாருங்கள்..!!

Photo of author

By Divya

Natural Face Pack: உங்கள் முகம் நிமிடத்தில் பொலிவாக இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தி பாருங்கள்..!!

Divya

Natural Face Pack: உங்கள் முகம் நிமிடத்தில் பொலிவாக இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தி பாருங்கள்..!!

பெண்கள் தங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள கெமிக்கல் நிறைந்த க்ரீம், பேஸ் பேக், பவுடர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பக்க விளைவுகள் தான் ஏற்படும்.

ஆபத்து நிறைந்த செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் பொலிவாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

*தக்காளி

*எலுமிச்சை சாறு

*அரிசி மாவு

செய்முறை:-

மிக்ஸி ஜாரில் ஒரு தக்காளி பழத்தை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி அரிசி மாவு கலந்து முகத்திற்கு அப்ளை செய்து கொள்ளவும்.

20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை கொண்டு முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வருவதன் மூலம் முகம் பளபளப்பாக மாறும்.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள்

*எலுமிச்சை சாறு

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை கொண்டு முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வருவதன் மூலம் முகம் பொலிவாக மாறும்.