நரை முடியை நிமிடத்தில் கருப்பாக்கும் இயற்கை ஹேர் டை – தயார் செய்வது எப்படி?

Photo of author

By Divya

நரை முடியை நிமிடத்தில் கருப்பாக்கும் இயற்கை ஹேர் டை – தயார் செய்வது எப்படி?

நவீன காலத்தில் எல்லோருக்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை இளநரை.
இதற்கு உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணங்களாக சொல்லப்பட்டாலும் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இளநரை ஏற்படக் காரணங்கள்:-

*முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்

*மன அழுத்தம்

*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல்

*முறையற்ற தூக்கம்

இளநரையை கருப்பாக மாற்ற இயற்கை ஹேர் டை தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*மருதாணி பொடி

*செம்பருத்தி பவுடர்

*மாதுளை பழத் தோல்

*கற்பூரவள்ளி இலை

செய்முறை:-

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் ஒரு மாதுளை பழத்தின் தோல் மற்றும் 10 கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

தண்ணீரின் நிறம் மாறி வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். அடுத்து அதில் 1 தேக்கரண்டி அளவு மருதாணி பவுடர், செம்பருத்தி பவுடர் 1 தேக்கரண்டி அளவு சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

10 நிமிடம் வரை ஊறவிட்டு பின்னர் தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி அப்ளை செய்து கொள்ளவும். பின்னர் 1 மணி நேரம் வரை ஊறவிட்டு தலையை எப்பொழுதும் போல் அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை என்று தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இளநரை அனைத்தும் கருமையாக மாறிவிடும்.