உங்கள் தலையில் காணப்படும் நரை முடி சில மணி நேரத்தில் கருமையாக இயற்கை ஹேர் டை!!

0
123
#image_title

உங்கள் தலையில் காணப்படும் நரை முடி சில மணி நேரத்தில் கருமையாக இயற்கை ஹேர் டை!!

இன்றைய நவீன உலகில் ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை நரை. அதிலும் இளநரை பாதிப்பால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெற்று விடுகிறோம்.

இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை, தலைக்கு ரசாயன ஷாம்பு உபயோகிப்பது போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த இளநரை பிரச்சனையை இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தீர்வு காண்பது மிகவும் நல்லது

இயற்கை ஹேர் டை – தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*மருதாணி பொடி – 1 தேக்கரண்டி

*பப்பாளி இலை சாறு – 1 கப்

*அவுரி பொடி – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பப்பாளி இலை சுத்தமாக அலசி நறுக்கி கொள்ள வேண்டும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து அவுரி பொடி 1 தேக்கரண்டி மற்றும் மருதாணி பொடி 1 தேக்கரண்டி எடுத்து வடிகட்டி வைத்துள்ள பப்பாளி இலை சாற்றில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த ஹேர் டையை தலை முடிகளின் வேர் பகுதிகளில் படுமாறு தடவி 1 மணி நேரத்திற்கு வைத்திருந்து பின்னர் தலைக்கு குளிக்கவும்.

இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம் என்றால் நீண்ட நாட்களாக இருக்கின்ற வெள்ளை முடி நாளடைவில் கருப்பாக மாறும்.

Previous articleஉங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள இந்த இரண்டு பொருட்கள் போதும்!!
Next articleஇந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!!