இயற்கை ஹேர் டை.. நரை முடியை 1 மணி நேரத்தில் கருமையாக மாற்றிவிடும்!! நம்புங்க அனுபவ உண்மை!!
நம் தலையில் வெள்ளை முடி எட்டி பார்க்கத் தொடங்கிவிட்டால் இளமை தோற்றம் குறைந்து விடும். தலை முடி இளம் வயதில் நரைக்க ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணங்களாக சொல்லப்பட்டாலும் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
இளநரை ஏற்படக் காரணங்கள்:-
*தலை முடியை முறையாக பராமரிக்க தவறுதல்
*முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்
*மன அழுத்தம்
*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தால்
*முறையற்ற தூக்கம்
1)மருதாணிப் பொடி + காபி தூள் ஹேர் டை
தேவையான பொருட்கள்:-
*மருதாணிப் பொடி – தேவையான அளவு
*காபி தூள் – 1 தேக்கரண்டி
ஹேர் டை செய்யும் முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். அவை கொதிக்கும் தருணத்தில் 1 தேக்கரண்டி காபி தூள் சேர்த்து கலக்கி அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு டம்ளருக்கு வடிகட்டிக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவு மருதாணிப் பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் தலை முடிகளுக்கு அப்ளை செய்யவும். குறிப்பாக முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி 1 மணி நேரம் வரை ஊற விடவும்.
பின்னர் மைல்டான ஷாம்புவை தலைக்கு உபயோகித்து அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வருவதன் மூலம் தலையில் உள்ள நரை முடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்.
2)கறிவேப்பிலை + தேங்காய் எண்ணெய்
தேவையான பொருட்கள்:-
*கறிவேப்பிலை – 1 கப்
*தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
செய்முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடாகும் நேரத்தில் 1 கப் கறிவேப்பிலையை சேர்த்து கருகும் வரை காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு பயன்படுத்தி வருவதன் மூலம் நரை முடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்.