பாம்பு கடித்தால் முதலுதவி செய்ய உதவும் இயற்கை மூலிகை மருத்துவம்
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். படைக்கே அஞ்சாதவர்கள் கூட பாம்புக்கு அலறுவார்கள் என்றும் கூறுவதுண்டு. பார்ப்பதற்கே ஒருவிதமாக அறுவறுப்பான பயத்தை கொடுக்க கூடிய தோற்றத்தை தரும் பாம்புகள் மனிதர்களை அடிக்கடி அச்சுறுத்துவதில் கில்லாடிகள்.
இவ்வளவு அச்சத்தை தரும் நம்மை கடித்தால் உடனடியாக நாம் செய்ய வேண்டிய முதலுதவி வைத்தியம் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1. வாழைத்தண்டு – சாறு250 மி.லி.,
2. வெற்றிலை – 3 முழுமையான இலை,
3. மிளகு பொடி – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் மேற்கூறிய பொருகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் வாழைத்தண்டை நன்றாக பிழிந்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடுத்துக்கொண்ட சாறுடன் 3 முழுமையான வெற்றிலை சாறு மற்றும் தேவையான அளவு மிளகு பொடியும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உருவான நீரை உடனே குடித்து வந்தால் பாம்பின் விஷம் 8 மணி நேரம் வரை மனித உடலுக்குள் செல்வது தடுத்து நிறுத்தப்படும். இதற்குள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கலாம்.