யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

0
95

யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

மனிதனின் வாழ்வில் தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு உடலுக்கு ஓய்வு கொடுப்பதை அந்நேரம் மட்டும்தான். அந்த வகையில் எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்திருப்பது அவசியம். பிறந்த குழந்தைகள் தின சரி 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

ஒன்றிலிருந்து ஐந்து வரை உள்ள குழந்தைகள் தினமும் பத்திலிருந்து 14 மணி நேரம் வரை தூங்கலாம்

ஆறிலிருந்து 13 வயது வரை அதாவது பள்ளி செல்லும் குழந்தைகள் தினசரி 9 மணி நேரத்தில் இருந்து 11 மணி நேரம் வரை தூங்க வேண்டும். 14 முதல் 17 வயதுடைய பதின் பருவ சிறார்கள் எட்டிலிருந்து பத்து மணி நேரம் தூங்கலாம். 18 முதல் 25 வயது உடைய வயது வந்த இளைஞர்கள் தினமும் 7 லிருந்து 9 மணி நேரம் தூங்குவது அவசியம். 26 வயதிற்கு மேல் 64 வயது வரை உள்ளவர்கள் தினசரி ஏழு டு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். 65 வயதை கடந்தவர்கள் 7 மணி நேரம் தூங்கினாலே போதுமானது.