வீட்டில் மொய்க்கும் ஈக்களை விரட்ட இயற்கை வழிகள்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

0
66
#image_title

வீட்டில் மொய்க்கும் ஈக்களை விரட்ட இயற்கை வழிகள்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

அளவில் சிறியவையாக இருக்கும் இந்த ஈக்களால் மனித உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் உருவாகி வருகிறது.இந்த ஈக்கள் பொது வெளிகளில் அசுத்தமான இடங்களில் இருந்து வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்து நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது.இந்த ஈ பாதிப்பை ஆராம்ப நிலையிலேயே ஒழிப்பது நல்லது.இல்லையென்றால் நம் உடலில் விரைவில் ஆரோக்கியமற்ற நிலைக்கு சென்று விடும்.இதனை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி விரட்டலாம்.

ஈக்களை வீட்டில் இருந்து விரட்ட எளிய வழிகள்:-

1)முதலில் ஒரு கிண்ணம் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட்,ஷாம்பு ஒரு தேக்கரண்டி மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம் 2 மற்றும் 2 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.பின்னர் அதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ள வேண்டும்.

இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஈக்கள் சுற்றும் பகுதிகளில் குறிப்பாக சமையலறையில் ஸ்ப்ரே செய்யவும்.நாம் தயார் செய்து வைத்துள்ள கலவை ஈக்களுக்கு பிடிக்காது.இதை வீட்டில் தெளிபதன் மூலம் ஈக்கள் வீட்டை விட்டு ஓடிவிடும்.இனி வீட்டு பக்கமே வராது.

2)ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் யூக்கலிப்டஸ் எண்ணெய் மற்றும் 1/4 கப் வினிகர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.அதை வீட்டில் ஈக்கள் மொய்க்கும் இடத்தில் தெளிக்கவும்.பொதுவாக ஈக்களுக்கு வினிகர் பிடிக்காது.இப்படி செய்வதன் மூலம் ஈ தொல்லை ஒழியும்.

3)ஒரு கிண்ணத்தில் இஞ்சி பொடி 2 தேக்கரண்டி சேர்த்து அதில் 3 முதல் 4 கப் அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.பின்னர் இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஈக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளித்து விடவும்.இப்படி செய்தால் ஈக்கள் தொல்லை இனி இருக்காது.

4)ஒரு பவுலில் 2 தேக்கரண்டி மற்றும் பாத்திரம் துலக்க பயன்படும் சோப் சிறிதளவு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஈக்கள் கூட்டம் இருக்கும் இடத்தில் தெளிக்கவும்.

5)அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் 1 கப் துளசி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பிறகு இதை ஆறவிட்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.வீட்டில் ஈக்கள் தொல்லை இருக்கும் இடத்தில் இதை ஸ்ப்ரே செய்து விடவும்.