பல நோய்களுக்கு மருந்தாகும் வேப்பம் பூ!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!

0
320

பல நோய்களுக்கு மருந்தாகும் வேப்பம் பூ!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!

பல நோய்களை குணப்படுத்தும் வேப்ப மரத்தில் இருந்து இருந்து கிடைக்கும் வேப்பம் பூவின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வேப்ப மரத்தின் குணங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். வேப்ப மரத்தின் இலைகள் முதல் பட்டை வரை ஒவ்வொரு பொருளும் மருந்தாக பயன்படுகிறது. வேப்பம் பட்டை, வேப்பங்காய், வேப்பிலை, வேப்பங்குச்சி என்று அனைத்தும் மருந்தாகும். மேலும் வேப்ப எண்ணெயும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

அதில் வேப்பம் பூவூம் ஒன்று. வேப்பம் பூவும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது. வேப்பம் பூவில் உடலுக்கு தேவையான புரதம், கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் சத்துக்கள் ஆகியவை உள்ளது. மேலும் வேப்பம் பூவில் நார்ச்சத்துக்களும் அதிகளவு உள்ளது. வேப்பம் பூவில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வேப்பம் பூவின் நன்மைகள்…

* ஜீரண சக்தியை மேம்படுத்த வேப்பம் பூ பயன்படுத்தப்படுகின்றது.

* வேப்பம் பூக்களை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து விடலாம்.

* வேப்பம் பூவை பயன்படுத்தி ஆண்மையை அதிகரிக்கலாம். அதாவது வேப்பம் பூவை வைத்து குல்கந்து தயாரித்து அதை எடுத்துக் கொள்ளும் பொழுது ஆண்மை அதிகரிக்கும்.

* தலைவலி அதிகமாக இருக்கும் பொழுது வேப்பம் பூவை பயன்படுத்தி ஆவி பிடித்தால் தலைவலி குணமாகின்றது.

* மேலும் இது போல காது வலி உள்ள சமயத்திலும் வேப்பம் பூவை பயன்படுத்தி ஆவி பிடித்தால் காது வலி குணமாகும்.

* வேப்பம் பூ பயன்படுத்தி தேநீர் வைத்து குடிக்கும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

* மூல நோய் உள்ளவர்கள் வேப்பம் பூவை எடுத்துக் கொள்ளலாம்.

* வேப்பம் பூவை சாதத்துடன் கலந்து சாப்பிடும் பொழுது வாந்தி, பித்தம், ஏப்பம் குணமாகும்.

* வேப்பம் பூ கஷாயம் செய்து குழந்தைகளுக்கும் நாமும் குடித்து வந்தால் வயிறு சுத்தமாகும்.

Previous articleமுதுகில் பருக்கள் அதிகமாக உள்ளதா!!! அதை குணமாக்க சில எளிமையான வழிமுறைகள் இதோ!!!
Next articleஉங்களுக்கு காது வலி இருக்கிறதா!!  அப்போ அதை குணமாக்க இதை செய்யுங்க!!