மஞ்சள் நிறத்தில் காணப்படும் பற்களை நிமிடத்தில் வெண்மை நிறத்திற்கு மாற்ற “வேப்பம் பொடி + பேக்கிங் சோடா” போதும்!!
நவீன கால உணவு முறை மாற்றத்தால் விரைவில் சொத்தை பல் உருவாகுதல், பல்லில் மஞ்சள் படலம் ஏற்படுதல், வாய்துர்நாற்றம், ஈறுகளில் இரத்த கசிவு என்று பல பாதிப்புகளை சந்தித்து சந்தித்து வருகிறோம்.
இந்த பாதிப்புகளுக்கு விரைவில் தீர்வு காண முயலுங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதே போல் தான் மஞ்சள் நிற பற்களை சரி செய்வதற்கான முறையான வழிகளை கடைபிடிக்க வேண்டும். வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து சுலபமான முறையில் மஞ்சள் பற்களை வெள்ளை நிறத்திற்கு அழகாக மாற்ற முடியும்.
தேவையான பொருட்கள்:-
*வேப்ப இலை – 1/2 கப்
*பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
செய்முறை…
1/2 கப் வேப்பிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். பின்னர் இதில் 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கலந்து ஒரு டப்பாவில் சேமிக்கவும்.
அடுத்த ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி அளவு தயார் செய்து வைத்துள்ள பவுடரை சேர்க்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். இதை பல் துலக்கும் பிரஸில் வைத்து பற்களை நன்கு துலக்கவும். இவ்வாறு காலை, இரவு என்று இரு வேளையும் பல் துலக்கி வந்தோம் என்றால் நாள்பட்ட பல் மஞ்சள் கறை நீங்கி பற்கள் வெண்மை நிறத்தில் பளிச்சிடும்.