உடல் உறவுக்கு அழைத்த மருமகன்! மாமியார் மறுத்தாரா?

0
491

கடலுாரில் மருமகன் கழுத்தை நெரித்து கொன்ற மாமியாரை,காவல் அதிகாரிகள் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த கழுதூரைச் சேர்ந்தவர் வேல்முருகன், இவர் வயது 27. இவர் கடந்த 28ம் தேதி தன் மாமியார் வீட்டிற்கு சென்றார்.

அன்றிரவு 11:45 மணியளவில், வேப்பூர் அரசு மருத்துவமனையில் வேல்முருகன் இறந்ததாக, அவரது தாய் மலர்கொடிக்கு தகவல் கிடைத்தது.

அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, வேப்பூர் காவல் நிலையத்தில் தாய் மலர்கொடி புகார் அளித்தார். பிறகு, பிரேத பரிசோதனையில், வேல்முருகன் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக தெரிய வந்தது.

வேல்முருகன் மனைவி பவித்ரா, மாமியார் குமுதா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரனை நடத்தினர். வேல்முருகனுக்கும், மாமியார் குமுதாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

28ம் தேதி இரவு குமுதா வீட்டிற்கு, மது போதையில் வந்த வேல்முருகன், அவரை உடல் உறவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்துள்ளார்.

மாமியாராகிய குமுதா மறுத்ததால் இருவருக்கும் இடையே போராட்டம் ஏற்பட்டது. அப்போது, வேல்முருகன் கழுத்தை குமுதா நெரித்திருக்கிறார் இதனால் தான் அவர் இறந்து உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

பின்னர் நாம் தான் கொலை செய்தோம் என தெரியாமா இருக்க வீட்டின் கூரையில் புடவையை மாட்டி, வேல்முருகன் துாக்கிட்டு தற்கொலை செய்தது போல் நாடகமாடியிருக்கார் என தெரிந்தது.

மேற்படி வேல்முருகன் மாமியார் குமுதாவை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

Previous articleமாவட்ட ஆட்சியாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை செயலாளர்!
Next article1800 மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுக்கும் நடிகர் விஷால்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here