இந்த மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள்!! மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!!

0
120
New buses for these districts!! Good news for people!!
New buses for these districts!! Good news for people!!

இந்த மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள்!! மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எஸ்இடி பஸ்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது. பச்சை நிறமாக இருந்த இந்த பேருந்துகள் அனைத்தும் தற்போது மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டு உள்ளது.

பச்சை மற்றும் வெள்ளி நிறத்தில் இருந்த பேருந்துகளுக்கு தற்போது வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கு உள்ளேயும் பலவிதமான வசதிகள் புதிதாக செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் நீண்ட தூர பயணங்களுக்காக கோவை, சேலம், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்ட பேருந்துகளை ஒப்பிட்டு பார்க்கும் போது சேலம், கோவை மதுரை முதலிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் சரியாக இல்லை.

எனவே, தமிழக அரசானது புதிதாக 600 நகர பேருந்துகள், 800 மாநகர பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதில் கோவைக்கு மட்டுமே 160 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழ்நாட்டில் பேருந்து வசதி தரமானதாக இல்லை. கர்நாடகாவில் ஐராவத் போன்ற பேருந்துகள் தனியாரை விட அதிகமான வசதிகள் கொண்டதாக மக்கள் விரும்பும் விதமாக உள்ளது.

எனவே, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக விரைவு பேருந்துகளில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, புதிய படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட 200 பேருந்துகளை வாங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதனுடன் 450 டவுன் பேருந்துகளை வாங்கவும் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரிவு வாரியாக விழுப்புரம்- 82 பேருந்துகளும், கும்பகோணம்- 112 பேருந்துகளும், சேலம்- 44, கோவை- 52, மதுரை- 99, திருநெல்வேலி- 61 என மொத்தமாக 450 பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Previous articleமாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் ஆன்லைன் தேர்வு வெளிநாடுகளுக்கு சுற்றுலா!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! 
Next articleதம்பி இயக்கத்தில் நடிக்கும் அண்ணன்!! வெளியான சூப்பரான தகவல்!!