புதிய மேம்பாலம் அமைக்கும் திட்டம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தினமும் புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துக்கொண்டே இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த மேம்பாலம் அமைக்கும் திட்டம்.
சென்னையில் உள்ள அண்ணா சாலையில் 621 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க அனுமதி கொடுத்து அரசாணை வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள அண்ணா சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
இதனால் பள்ளிக்கு, கல்லூரிக்கு மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அனைவருமே சரியான நேரத்திற்கு சென்றடைய முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே இந்த நெரிசலைத் தவிர்ப்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடப்பு நிதி வருடத்திற்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.
எனவே தற்போது சென்னையில் உள்ள அண்ணா சாலையில் புத்தம் புதிய ஒரு மேம்பாலம் அமைக்க 621 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த திட்டம் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது.