வாகனங்களுக்கு இனி புதிய முறை காப்பீடு கட்டாயம்! உயர்நீதிமன்றம் அதிரடி!

0
125
New insurance method must for new vehicles
New insurance method must for new vehicles

வாகனங்களுக்கு இனி புதிய முறை காப்பீடு கட்டாயம்! உயர்நீதிமன்றம் அதிரடி!

வாகன விபத்துக்கள் தமிழகத்தில் அதிக அளவில் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.இருசக்கரம்,நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.மேலும் வாகன விபத்துகளை தடுக்க தமிழக அரசும் பல சட்டங்களை இயற்றி வருகிறது.இதன் காரணமாக ஓட்டுனர்கள் மற்றும் வாகனத்தின் உரிமையாளர்கள் தங்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும்.

இந்நிலையில் தற்போது பம்பர் டூ பம்பர் என்ற முறையில் காப்பீடு சீய்வது கட்டாயம் ஆக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த முறையில் வாகன ஓட்டுனர்,உரிமையாளர் மற்றும் அதில் பயணம் செய்பவர்கள் என அனைவருக்கும் சேர்த்து 5 ஆண்டுகள் காப்பீடு செய்ய வேண்டும்.இந்த முறை இனி புதிய வாகனத்தை வாங்கும் அனைவருக்கும் பொருந்தும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அடுத்த மாதம் செப்டம்பர் 1 முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2016ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கலில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்த சடையப்பன் என்னும் நபரின் குடும்பத்தினர் அவரின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு போட்டனர்.வலக்கை விசாரித்தத் தீர்ப்பாயமானது அவரின் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாகனத்திற்கான ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் என்ற அடிப்படையில் மட்டுமே வாகனத்துக்கு காப்பீடு எடுக்கப்பட்டதாகவும் ஓட்டுநர் அல்லாத ஒருவர் இறப்பிற்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க முடியுமென காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி புதிய வாகனத்தை வாங்கும்போது காப்பீட்டு நடைமுறைகளை ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சரியாக படிப்பதில்லை என வருத்தம் தெரிவித்தார்.மேலும் ஈரோடு தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Previous articleவருமான வரி செலுத்தாத விவகாரம்! சசிகலாவிற்கு எதிராக உறுதியாக நிற்கும் வருமான வரித்துறை!
Next articleதிராவிட இயக்கங்களுக்கு துக்ளக் குருமூர்த்தி வைத்த சூடு! கொதித்தெழுந்த முரசொலி நாளிதழ்!