மருத்துவக் காப்பீடு திட்டத்தின் புதிய அறிவிப்பு!! குஷியில் மக்கள்!!

Photo of author

By CineDesk

மருத்துவக் காப்பீடு திட்டத்தின் புதிய அறிவிப்பு!! குஷியில் மக்கள்!!

தமிழகத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தினந்தோறும் புதிய திட்டங்கள் வந்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கொண்டுவரப்பட்டது தான் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம்.

இத்திட்டம் ஏழை மற்றும் குறைந்த வருவாய் சம்பாதிக்கும் மக்களின் உயிர் காக்கும் சிகிச்சையை கட்டணமில்லாமல் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. மருத்துவக் காப்பீடு திட்டம் 23.07.2009 அன்று தமிழக அரசால் துவங்கப்பட்டது.

இதனால் அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்ளிட்ட 1090 சிகிச்சை முறைகளுக்கும் மற்றும் 8 தொடர் சிகிச்சைமுறைகளுக்கும், மேலும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து குடும்பங்களுக்கும் இந்த மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் அனைவரும் தனியார் மருத்துவமைனகளில் இலவச சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தால் பல பேர் நன்மைகளை அடையாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

எனவே இவர்களுக்கு உதவும் விதமாக புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கமும், ஸ்ரீ ராகிருஷ்ணா மருத்துவமனையும் கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான துவக்க விழா கோயம்புத்தூரில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில், ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடந்தது.

எனவே இந்த முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விரும்பும் மக்கள் இங்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் பல்வேறு ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.