தமிழக அரசுக்கு வந்துள்ள புது சிக்கல்.. இனி பெண்களின் ஓட்டு திமுகவுக்கு கிடைப்பது சந்தேகம் தான்!!
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்.அதன் பின் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்களுக்கும் மேல் ஆகியும் இந்த திட்டம் குறித்து பேசாமல் இருந்து வந்தார் ஸ்டாலின்.
இதனால் மற்ற எதிர்க்கட்சி தலைவர்கள்,ஆளும் திமுக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர்.பொதுமக்களும் விரைவில் பெண்களுக்கான உரிமைத் தொகை திட்டத்தை நடைமுறைப் படுத்துங்கள் என்று ஆளும் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.இதனால் வேறு வழியின்றி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தார்.
மாதந்தோறும் வழங்க உள்ள ரூ.1000 திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று அறிமுகப்படுத்தி கடந்த ஜூலை அன்று இதற்கான பணிகளை அரசு மேற்கொள்ள தொடங்கியது.தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்ப தலைவிகளும் இந்த திட்டத்தில் பயனடைய விண்ணப்பம் செய்தனர்.
மொத்தம் ஒரு கோடியே அறுபத்து மூன்று லட்சத்துக்கும் அதிகமான குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு கோடியே ஆறு லட்சம் குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் மற்றுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது.சுமார் 60 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 15 அன்று அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டலின் தொடங்கி வைத்தார்.அன்று முதல் இன்று வரை
ரூ.1000 திட்டத்தில் சேர தகுதி இருந்தும் லட்சக்கணக்கான பெண்கள் நிராகரிக்கப்பட்டு விட்டனர் என்று தொடர்ந்து திமுக அரசை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.பெண்கள் பலர் தங்களது ஓட்டுக்களை திமுக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பெற்றுவிட்டது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இதனால் ஆடிப்போன முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ரூ.1000 பெறுவதற்கான திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பெண்களை சமாதானம் செய்ய மேல்முறையீடு என்ற புது முயற்சியை கையில் எடுத்தார்.விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என்று அவர் அறிவித்தார்.
இதனால் விண்ணப்பம நிராகரிக்கப்பட்ட பெண்கள் சற்று ஆறுதல் அடைந்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட அடுத்த 10 நாட்களுக்கும் மேலாக இ-சேவை மையத்தில் விண்ணப்பம் செய்ய முடியமால் பெண்கள் தவித்து வந்தனர்.
அரசு அறிமுகப்படுத்திய இணையதள லிங்க் வேலை செய்யாமல் போனதால் காலை முதல் மாலை வரை கால்கடுக்க நின்று ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம் என்று வேதனை தெரிவித்தனர்.பிறகு சமீபத்தில் அரசு அறிமுகப்படுத்திய வெப்சைட் வேலை செய்யத் தொடங்கியதால் பெண்கள் விண்ணப்பம் செய்ய தொடங்கினர்.சுமார் 7 லட்சம் பெண்கள் இதுவரை விண்ணப்பம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் 4 நாட்களில் முடிய இருக்கும் நிலையில் பெண்கள் அனைவரும் விண்ணப்பம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தடை செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.இந்த வழக்கை மதுரை மாவட்டத்தை சேர்ந்த கே.கே.சுரேஷ் என்பவர் தொடர்ந்து இருக்கிறார்.கடன் சுமை அதிகம் கொண்ட மாநிலங்களில் முதல் இடத்தில் இருப்பது தமிழ்நாடு தான்.இப்படி கடன் சுமையில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் பொழுது இது மாதிரியான திட்டத்தால் தமிழ்நாட்டின் கடன் தொகையானது மேலும் அதிகரிக்க தொடங்கிவிடும்.எனவே இதுபோன்ற திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று அவர் தாக்கல் செய்த ரிட் மனுவில் தெரிவித்து இருக்கிறார்.
ஒருவேளை இந்த திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தால் அது திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.இந்த பின்னடைவு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெளிப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.