மகாளய அமாவாசையில் நடைபெறும் சூரிய கிரகணம்!!! இந்தியாவில் தெரிய வாய்ப்பு இருக்கின்றதா!!?

0
48
#image_title
மகாளய அமாவாசையில் நடைபெறும் சூரிய கிரகணம்!!! இந்தியாவில் தெரிய வாய்ப்பு இருக்கின்றதா!!?
மகாளய அமாவாசையில் இன்று(அக்டோபர்14) நடைபெறும் நிலையில் 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
பூமியை பொறுத்தவரை ஒரு வருடத்தில் 2 சூரிய கிரகங்கள் முதல் 5 சூரிய கிரகணங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று(அக்டோபர்14) நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசையில் நடைபெறும் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி இந்திய நேரப்படி இரவு 8.44 மணிக்கு துவங்கும் சூரிய கிரகணம் நள்ளிரவு 2.25 மணி வரை நடைபெறவுள்ளது.
இரவு நேரத்தில் இந்த சூரியகிரகணம் நடைபெறுகின்றது என்பதால் இந்தியாவில் இந்த சூரியகிரகணம் தெரிய வாய்ப்பு இல்லை. மேலும் இந்த சூரிய கிரகணம் அமெரிக்கா நாட்டில் தெரியும் என்றும் நெருப்பு வளையம் போல இந்த சூரிய கிரகணம் காட்சி அளிக்கும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தை அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் வலைதளத்தில் நேரடியாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து அக்டோபர் மாதம் 28ம் தேதி பௌர்ணமி நாளன்று சந்திர கிரகணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்திய நேரப்படி அக்டோபர் 28ம் தேதி இரவு 11.31 மணிக்கு தொடங்கி மறுநாள் அக்டோபர் 29ம் தேதி அதிகாலை 3.56 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் மிகத் தெளிவாகத் தெரியும் என்றும் மக்கள் வெறும் கண்களில் காணலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.