தமிழ் கடவுளை அவமதிக்கும் விதமாக காக்டெய்ல் திரைப்பட போஸ்டர் வெளியீடு!
சமீபத்தில் வெளியான காக்டெய்ல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சரச்சையை தூண்டும் விதமாக உள்ளது. அதில் தமிழ் கடவுள் முருகன் வேடத்தில் நடிகர் யோகி பாபு முருகனை போல் காட்சி தருவதாக போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களிடையே காக்டெய்ல் பட போஸ்டர் ஆரம்பத்திலேயே சர்ச்சை உண்டாக்கியது.
விமர்சனங்களின் அடிப்படையில் இந்த போஸ்டர் குறித்து காக்டெய்ல் திரைப்படத்தின் இயக்குனர் முருகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கடவுளை அவமதிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, அந்த நோக்கத்தில் நாங்கள் போஸ்டரை வடிவமைக்கவில்லை என்றும், இந்த போஸ்டர் யாரையும் புண்படுத்தவோ அல்லது எந்த உள் நோக்கத்துடனும் உருவாக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இப்படத்தில் தமிழ் கடவுள் முருகரின் வேடம் முக்கிய இடம் பெறுவதால் கதைக்காக வெளியிட்டோம் என்று தெரிவித்தார். பல்வேறு திருவிழா நிகழ்வுகளில் சிவன் மற்றும் முருகன் வேடம் அணிந்து பண்பாட்டு நிகழ்வை நடத்துகிறோம். இதையே திரைப்படத்தில் காட்டினால் தவறாகுமா..? என்று கேள்வியுடன் விளக்கம் கூறினார். தமிழ் கடவுள்களை வழிபட்டு கொண்டாடும் எங்களைப் போன்ற ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமையாக பார்க்கிறோம். இதை எப்படி எங்களால் தவறாக சித்தரிக்க முடியும் என்று தனது பக்க நியாயத்தை வெளிப்படுத்தினார்
இதனையடுத்து, படத்தின் தலைப்பான காக்டெய்ல் என்கிற பெயர் ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் ஒரு கிளியை மையப்படுத்தி வைக்கப்பட்டதுள்ளது என்றும், இந்த போஸ்டரில் முருகன் மயிலை பயன்படுத்துவதற்கு மாறாக கிளியை பயன்படுத்தி இருப்பதாகவும் கூறினார். தனது விளக்கத்தின் மூலம் படத்திற்கான ஆரம்பகட்ட சர்ச்சைக்கு படத்தின் இயக்குனர் முருகன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.