தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு! உயிரிழப்பும் குறைந்து வருவதால் நிம்மதி!

Corona Patients

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பும் குறைந்து வருவதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை 36ஆயிரம் என்ற உச்சத்தைத் தொட்டு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 20,421 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், கோவையில் 2,645 பேருக்கு அதிகபட்சமாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,644 பேரும், ஈரோட்டில் 1,694 பேரும், சேலத்தில் 1.071 பேரும், திருப்பூரில் 1,068 பேரும் … Read more

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், படிக்கும் நாடுகளுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்? வெளியுறவுத்துறை விளக்கம்!

MEA

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், படிக்கும் நாடுகளுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்? என வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்த ஆரம்பித்ததில் இருந்து, பல்வேறு நாடுகள் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை நிறுத்தின. இதனால், வெளிநாடுகளில் பணிக்காகவும், படிப்புக்காகவும் சென்று தவித்து வந்தவர்களை சிறப்பு விமான சேவை மூலம் ஒவ்வொரு நாடும் அழைத்து வந்தன. இந்தியாவும் இதே போன்று, பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்களையும், வேலை இழந்து தவித்தவர்களையும் தாயகம் அழைத்து … Read more

நாமக்கல்லில் கொரோனா சிறப்பு வார்டு படுக்கையில் நாய்கள் படுத்திருந்ததால் அதிர்ச்சி!

Namakkal Hostital Dog

நாமக்கல் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டு படுக்கையில் நாய்கள் படுத்திருந்ததால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 719 நபர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனால், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் … Read more

தடுப்பூசிக்காக அவதிப்படும் போது, டிவிட்டர் புளு டிக்குக்காக சண்டையிடுவதா? ராகுல்காந்தி சாடல்!

Rahul Gandhi

பொதுமக்கள் தடுப்பூசிக்காக அவதிப்படும் போது, மத்திய அரசு டிவிட்டர் புளு டிக்குக்காக சண்டையிடுவதா? ராகுல்காந்தி சாடியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் குறைந்த அளவே தடுப்பூசி தயாரிக்கப்படுவதால், தினந்தோறும் தடுப்பூசி முகாம்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசுகளிடம் தடுப்பூசி கேட்டு வருகின்றன. ஆனாலும், தடுப்பூசி குறைந்த அளவே கிடைப்பதால் பொதுமக்கள் நாள்தோறும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. … Read more

பீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி!

Arvind Kejriwal

பீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி மாநிலத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று டெலிவரி செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கான திட்டத்தை கடந்த மார்ச் மாதம் வகுத்து திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தடைகளை உடைத்து விடுகளில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ஆனால் 2 … Read more

வண்டலூரில் புலிகளுக்கும் கொரோனா டெஸ்ட்! சிங்கம் இறந்ததால் நடவடிக்கை!

Tiger

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், புலிகளுக்கும் டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், உள்ள சிங்கங்கள் சரியான உணவு உண்ணாமல் இருந்தன. இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட டெஸ்டில் 11 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அன்று மாலையே தொற்று பாதித்த நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து சிங்கங்களை தனிமைப்படுத்தப்பட்டன. விஜி மற்றும் சசி என்ற இரண்டு … Read more

விதிகளை ஏற்காத டிவிட்டர்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

twitter vs india

இந்தியாவின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு டிவிட்டர் நிறுவனம் இணங்க வேண்டும் என மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச் சகம் புதிய ஒழுங்கு விதிகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்தது. இந்த விதிகளை ஏற்றுக் கொள்ள சமூக வலைதளங்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. காலக்கெடு கடந்த மே 25-ம் தேதியுடன் நிறைவடைந்ததால், புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதனை ஏற்று ஃபேஸ்புக், வாட்ஸாப் உள்ளிட்ட நிறுவனங்கள், … Read more

கொரோனா 2ம் அலை ஓய்ந்ததாக நினைப்பது மிகப்பெரிய தவறு! மருத்துவர்கள் எச்சரிக்கை!

corona second wave

கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்ததாக நினைப்பது மிகப்பெரிய தவறு என மருத்துவகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ்  இரண்டாம் அலை பரவலில் 4 லட்சம் என்ற உச்சத்தை பாதிப்பும், 4 ஆயிரத்து 500 என்ற உச்ச்த்தில் உயிரிழப்பும் எட்டியது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதால் தமிழகம், டெல்லி உட்பட பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக … Read more

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு. தமிழ்நாட்டில் உள்ள வட்டங்களுக்கு அஞ்சல் துறையின் கார் டிரைவருக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. பணி: Tamilnadu Postal Circle பணி : மத்திய அரசு பணி காலிபணியிடம்: 25 இடம்: சென்னை பணியின் பெயர்: Staff Car Driver கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க … Read more

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்: இந்த ஐந்து மாற்றங்களை உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள்!

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்: இந்த ஐந்து மாற்றங்களை உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள்!

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் ‌. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் உங்கள் வாழ்வில் ஒரு சிறந்த நாளாக இருக்க வேண்டுமெனில் ஐந்து மாற்றங்களை உங்கள் வாழ்வில் நீங்கள் கடைபிடித்தால் நாம் வாழ்வில் மேன்மை அடையலாம்.நம் வீட்டு அலங்கார பொருட்கள், நாம் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள், மேஜைகள் மற்றும் பல சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவாறு விற்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு நீங்கள் வாழ்வில் நிலையான ஒன்றை மாற்ற வேண்டும் என … Read more