தமிழ்நாட்டில் அடுத்ததாக லுலு ஹைப்பர் மார்க்கெட்!! தடை விதிக்கக் கோரி புகார் மனு!!

0
184

தமிழ்நாட்டில் அடுத்ததாக லுலு ஹைப்பர் மார்க்கெட்!! தடை விதிக்கக் கோரி புகார் மனு!!

தமிழ்நாட்டில் முதல்முறையாக லூலூ ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூரில் வருகிற 2024 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாக லுலு நிறுவனம் முடிவு செய்தது. கோவையில் உள்ள அவிநாசி சாலையில் இதற்கான வேலைகள் வேகமாக நடந்து முடிந்த நிலையில், 1.20 லட்சம் சதுர அடியில் இந்த லுலு ஹைப்பர் மார்க்கெட் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோவையில் ஏற்கனவே நிறைய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் மற்றும் மால்கள் காணப்பட்டாலும் அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு சுலபமாக இந்த லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் வீட்டிற்கு தேவையான உபயோகப் பொருட்கள், உணவுகள், காய்கறிகள், பழங்கள் என்று அனைத்துமே கிடைக்கும். இந்த ஹைப்பர் மார்க்கெட்டில் தினமும் கூட்டம் நிரம்பி வழிவதால் மற்ற டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் மற்றும் மால்களில் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய லுலு நிறுவனத்தினர் யூசூப் அலி நிறைய முக்கிய தகவல்களை கூறினார். கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் உணவு பதப்படுத்தும் மையம் அமைய உள்ளதாகவும், சென்னையிலும் இதுபோன்று ஹைப்பர் மார்க்கெட் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாடர்ன் ரைஸ் மில் அமைத்து சர்வதேச அளவில் அரிசி பேக்கிங் செய்து ஏற்றுமதி செய்யப்படும். தற்போது கோவை ஹைப்பர் மார்க்கெட்டில் சுமார் 700 பேருக்கு வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதுபோன்று மற்ற மாவட்டங்களிலும் இந்த லுலு ஹைப்பர் மார்க்கெட் வருவதை வணிகர்கள் சங்கம் கடுமையாக எதிர்த்து வருகிறது. இது குறித்து முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து பேசுவதாக விக்கிரமராஜா கூறி இருந்தார். கோயம்புத்தூரில் கொண்டுவரப்பட்ட இந்த லுலு ஹைப்பர் மார்க்கெட் போல் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் அமைக்கப்பட்டால் சிறு வணிகர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

எனவே மற்ற பகுதிகளில் இந்த ஹைப்பர் மார்க்கெட்டை திறக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று விக்கிரமராஜா கூறி வருகிறார். மேலும் வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதிப்புகளை இனி எங்கும் நடக்க விடமாட்டோம். இதற்கான குழு அமைத்து தீவிரமாக கண்காணிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous articleஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி!! முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் குவிப்பு!!
Next article இனி எல்லாம் இந்த செயலி மூலமே அறிய முடியும் !!எஸ்பிஐ வங்கி அறிமுகபடுத்திய புதிய சேவை!!