வருகின்ற சனி இந்த மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படும்.. பள்ளிகல்விதுறை அறிவிப்பு..!

Photo of author

By Janani

மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த மாதம் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது. இதனால், பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்தது. இதனால், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது.

அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைநாளாக இயங்கும் என தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், வருகின்ற சனிக்கிழமை (03.12.2022) அன்று பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்படுள்ளது. இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழையால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அந்த பணி நாட்களை ஈடு செய்வதற்காக வருகின்ற சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும் என தெரிவித்தார். சனிக்கிழமையில் திங்கள் கிழமை பாடவேளையினை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.