உதயநிதியை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்..!!

Photo of author

By Divya

உதயநிதியை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்..!!

Divya

Updated on:

உதயநிதியை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்..!!

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் உருவான மிக்ஜாம் புயலால் வட தமிழகம் ஒரு ஆட்டம் கண்டது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து மக்களை படுத்தி எடுத்துவிட்டது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த பேய்மழை காரணமாக உருவான வெள்ளபெருகின் பொழுது மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக விளக்கினார்.

அப்பொழுது அவர் பேசுகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசியில் ஒரு வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்துவிட்டது. மழை எச்சரிக்கையை அறிந்து டிசம்பர் 18 அன்று அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கி விட்டோம். சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை குறித்து 5 நாட்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுத்தது. அதுமட்டும் இன்றி ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒருமுறை வானிலை அப்டேட்டை வழங்கி வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை குறித்து முறையான தகவல்களை வழங்கவில்லை என்று தமிழக அரசு சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதுமட்டும் இன்றி போதிய வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தமிழக அரசு வழங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி அவர்கள் மத்திய அரசில் செயல்பட்டு வருபவர்கள் அவர்கள் அப்பன் வீட்டு பணத்தையா தருகிறீர்கள்? என்று
பேசிய விவகாரத்திற்கு நச் பதிலடி ஒன்றை நிர்மலா வழங்கி இருக்கிறார். அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டு இருக்கும் ஒருவர் இதுபோன்று நாகரிமற்ற முறையில் பேசுவது சரியா? பிறரிடம் பேசும் பொழுது மரியாதையுடன், தகுதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக தரும் ரூ.6 ஆயிரத்தை தமிழக அரசு ஏன் ரொக்கமாக தருகிறது? அவரவர் வங்கி கணக்கில் செலுத்தலாமே. உங்க அப்பன் வீட்டு சொத்தோ, என் அப்பன் சொத்தோ இல்லையே.. அது அரசு பணம் தானே? உண்மையிலேயே பாதிக்கப் பட்டவர்களுக்குத் தான் பணம் செல்கிறதா? என்பதை எவ்வாறு உறுதிபடுத்துவது என தமிழக அரசுக்கும், அமைச்சர் உதயநிதியின் திமிரான பேச்சுக்கும் தன் பாணியில் பதிலடி கொடுத்து இருக்கிறார்.