பேசாமல் வானிலை ஆய்வு மையத்தை பூட்டி விடலாம்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!!

0
172
#image_title

பேசாமல் வானிலை ஆய்வு மையத்தை பூட்டி விடலாம்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!!

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் “பேசாமல் சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து பூட்டி விடலாம்” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று(டிசம்பர்22) வந்தார். நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் “சென்னையில் இயங்கி வரும் வானிலை ஆய்வு மையத்தை பேசாமல் இழுத்து மூடி விடலாம். ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தான் எப்பொழுதும் கூறுகிறார்கள்.

உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அதே போல இங்கும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் இங்கு சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலை தான் இன்னும் தொடர்கின்றது. நான் தொடர்ந்து காலநிலை மாற்றம் குறித்து குரல் கெடுத்து வருகின்றேன்.

மத்திய அரசு தேவையான நிவாரண நிதியை விரைவாக கொடுக்க வேண்டும். நிவாரண நிதி கொடுக்கும் விஷயத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கவோ செய்யவோ கூடாது. வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் விரைவாக செயல்படுத்த வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் வெள்ள நிவாரண நிதி கொடுப்பது என்பது நிச்சயம் போதாது” என்று அவர் கூறினார்.