நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்! வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

0
209
#image_title

நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்! வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வு இன்றுடன்(டிசம்பர்22) முடியும் நிலையில் நாளை(டிசம்பர்23) முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றது என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 12ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு மட்டும் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. அதே போல தென். மாவட்டங்களில் கன மழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் அங்கும் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கனமழை ஏற்படுத்திய சேதத்தால் மாணவர்களின் புத்தகங்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதனால் அவர்களால் படிக்க முடியாமல் போனதால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மற்ற மாவட்டங்களில் நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வு இன்றுடன்(டிசம்பர்22) முடியவுள்ளது.

இதையடுத்து மற்ற மாவட்டங்களில் நாளை(டிசம்பர்23) முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கவுள்ளது. மேலும் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் இன்று(டிசம்பர்22) மாலையுடன் அரையாண்டு தேர்வு முடிகின்றது. இதனால் அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.