இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் !
தமிழ்நாட்டிற்குள் எந்தவித விசாரணையாக இருந்தாலும் இனி மாநில அரசின் அனுமதி பெற்ற பின்னர் தான் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்து மாநில அரசானது மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்கப் பட்ட அளிக்க பட்ட அனுமதியை திரும்ப பெறப்பட்டது. அனுமதி இன்றி தமிழ்நாட்டிற்குள் எவ்வித விசாரணையாக இருந்தாலும் தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெற்ற பின்பு தான் தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதன் படி தமிழ்நாடு அரசு பிறப்பித்ததன் உத்தரவானது. எந்த ஒரு மாநிலத்திலும் மத்திய புலனாய்வு துறையான (சிபிஐ) விசாரணை மேற்கொள்ளுவதாக இருந்தாலும் அந்த அந்த மாநில அரசின் முன் அனுமதியை பெற்ற பின்னரே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று 1946 டெல்லி சிறப்பு காவல் அமைப்பு சட்ட பிரிவு 6 இல் அரசாணை பிறப்பித்து உள்ளது.
1989 மற்றும் 1992 ஆண்டுகளில் இவ்வகை சட்ட பிரிவுகளின் கீழ் பல வழக்குகள் வழங்கப்பட்ட நிலையில் இவ் அரசாணையை தமிழக அரசு இச்சட்டத்தை திரும்ப பெற்றது. இது மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வைத்த பெரிய செக் ஆக பார்க்கபடுகிறது.
இது போன்ற அரசாணை ஏற்கனவே ராஜஸ்தான் ,பஞ்சாப், மேற்குவங்கம், மிசோரம், தெலுங்கானா,கேரளா போன்ற மாநிலங்களில் சட்டம் பிறப்பிக்கபட்டது. அனால் தற்போது தான் தமிழ்நாட்டில் இந்த அரசாணை பிறப்பித்து உள்ளனர்.