இனி நீண்ட நேரம் நின்று டிக்கெட் பெற அவசியம் இல்லை! ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்ட புதிய வசதி?

Photo of author

By Parthipan K

இனி நீண்ட நேரம் நின்று டிக்கெட் பெற அவசியம் இல்லை! ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்ட புதிய வசதி?

சென்னையில் வசித்து வருபவர்கள் பெரும்பாலும் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்தையும் பயன்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பயண சீட்டு வாங்கி வருவதால் பெரும் சிரமம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் போக்குவரத்து குழுமத்தின் மூலம் ஆலோசனை நடத்தி மூன்றிற்கும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்து பணம் செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என கூறினார்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் சில முக்கிய ரயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு அல்லது கியூஆர் கோட் உபயோகம் செய்து ஊழியர்கள் இன்று டிக்கெட் வாங்கிக் கொள்ளும் வசதியை கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் நின்று பயணித்து வருவதால்  சிரமம் குறைந்துள்ளது.

மேலும் தற்போது சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 24 நிலையங்களில் கூடுதலாக 96 தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. சென்னையில் மின்சார ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றது.

அதனால் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 24 நிலையங்களில் கூடுதலாக 96 தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. அலுவலக நேரங்களில் பயணிகள் டிக்கெட் கவுண்டர்களின் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க இந்த நடைமுறை உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.