இந்தியாவில் ரூ.9,999 விலையில் அறிமுகமாகும் Nokia C31….இதன் சிறப்பம்சங்கள் என்ன?

Photo of author

By Savitha

Nokia C31 6.7-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் மூன்று நாட்கள் வடை சார்ஜ் நிற்கக்கூடிய வகையிலான பேட்டரியை கொண்டுள்ளது.

90ஸ் கிட்ஸ்களின் வண்ணமயமான காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது நோக்கியா மொபைல்கள் தான், நோக்கியா என்றாலே அவர்களின் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்க தொடங்கிவிடும். இந்த மொபைல்களில் ஒரு நாள் சார்ஜ் போட்டாலே வாரக்கணக்கில் பயன்படுத்தி கொள்ளலாம். ஹெச்எம்டி குளோபல் தற்போது இந்தியாவில் Nokia C31 மொபைலை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. Nokia C31 6.7-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் மூன்று நாட்கள் வடை சார்ஜ் நிற்கக்கூடிய வகையிலான பேட்டரியை கொண்டுள்ளது. இந்த மொபைலை நீங்கள் Nokia.com தளத்திலும், சில்லறை விற்பனை கடைகளிலும் பெற்று கொள்ளலாம்.Nokia C31 smartphone with 6.7” HD+ display

3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த மொபைல் சார்கோல், மின்ட் மற்றும் சியான் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.9,999 ஆகும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த மொபைலானது ரூ.10,999க்கு விற்கப்படுகிறது. 1 வருட ரிட்டர்ன் ஆஃபருடன் வரும் இந்த மொபைல் விரைவில் இ-காமர்ஸ் தளங்களிலும் கிடைக்கும். Nokia C31 ஆனது டிரிபிள் ரியர் கேமரா மற்றும் ஒற்றை செல்ஃபி கேமராவுடன் வருகிறது மற்றும் இது வாட்டர்ஃப்ரூக் வசதியுடனும் வருகிறது.Nokia C31 With 6.7-Inch HD+ Display, Pure Android Experience Launched:  Price in India, Specifications - MySmartPrice

இதில் ஒரு சூப்பர் பேட்டரி சேவர் கிடைப்பதுடன் இந்த மொபைலின் பேட்டரி மூன்று நாள் வரை சார்ஜ் தாங்கக்கூடிய வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் Nokia C31 மொபைலில் ஸ்பாட்டிஃபை, கோ ப்ரோ குயிக் மற்றும் கூகுளை செயலிகள் உட்பட பல செயலிகள் கிடைக்கிறது. இதுதவிர ஆண்ட்ராய்டு தனியுரிமைக் கட்டுப்பாடுகள், கைரேகை ஃபேஸ் அன்லாக் அம்சங்களும் இந்த மொபைலில் உங்களுக்கு கிடைக்கிறது.