குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ.2000.. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

0
95
Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!
Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ.2000.. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்ற பொழுது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு 2500 ரொக்க பணமும் உங்களுக்கு தேவையான மள்ளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதை அடுத்து திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சியில் அமர்வதால் மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தான் திமுக அளித்தது ஏனென்றால் 21 பொருட்கள் அடங்கிய மள்ளிகை பொருட்களை மட்டும் பொங்கல் பரிசாக வழங்கிவிட்டு எந்த ஒரு பணத்தையும் வழங்கப்படவில்லை.

அவ்வாறு வழங்கப்பட்ட 21 பொருட்களும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்திருந்ததால் அப்பொருள்கள் தரமற்றதாக இருந்ததாகவும் பல இடங்களில் புகார் எழுந்தது.

தற்பொழுது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தற்போது வரை தமிழக அரசு பொங்கல் தொகுப்பு குறித்தோ, வழங்கப்படும் பணம் குறித்தோ எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

ஆனால் இம்முறை பொங்கல் பரிசு அவரவர் வங்கிக் கணக்கில் போடப்படும் என்ற பேசப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கை தான் கூட்டுறவு வங்கி மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டைதாரர்கள் கூட்டுறவுத் துறையின் மூலம் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதன் வைத்துப் பார்க்கையில் இம்முறை கட்டாயம் பொங்கல் பரிசு பணமானது வங்கி கணக்கில் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு ஆனது போதுமானதாக இருக்காது எனக் கூறி மூவாயிரம் ரூபாயை தருமாறு ஓபிஎஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். அந்த வகையில் மக்கள் 2000 ஆவது பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.