தாய்ப்பால் சுரக்கவில்லையா? கவலை வேண்டாம்.. இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!

0
341
#image_title

தாய்ப்பால் சுரக்கவில்லையா? கவலை வேண்டாம்… இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!

பிறந்த குழந்தைகளுக்கு மிக முக்கியமான உணவு என்றால் அது தாய்பால்தான். தாய்பாலில்தான் குழந்தைகளுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

சில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்தால் அழகு போய்விடும் என்று நினைத்து தாய்பாலை கொடுக்க மறுக்கிறார்கள். இது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே என்று வருத்தப்படுகிற தாய்மார்கள்கூட இருக்கிறார்கள்.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் நன்மைதான். தாய்ப்பால் கொடுத்தால், மார்பகப் புற்றுநோய்யிலிருந்து பெண்கள் தப்பித்துக் கொள்ளலாம். சிலர் பிரசவத்துக்குப் பிறகு அதிக எடை போட்டுவிடுவார்கள். அப்படி எடை கூடிவிட்டால், குறைப்பதற்கு தாய்ப்பாலை கொடுத்தால் பழைய உடல்வாகைப் பெறலாம்.

சரி இன்றைய காலத்தில் தாய்ப்பால் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. என்னென்ன உணவுகள் சாப்பிட்டால் தாய்ப்பாலை இயற்கையாக சுரக்க வைக்க முடியும் என்று பார்ப்போம் –

பூண்டு, வெங்காயம் :

தாய்ப்பால் சுரக்க, பெண்கள் உணவில் பூண்டையும், வெங்காயத்தையும் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தில் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

முருங்கை கீரை:

முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. முருங்கை இலையை பொரியல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

பயறு வகைகள் :

கொண்டைக் கடலையில் ஏராளமான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் புரோட்டீன்கள் அடங்கியுள்ளன. தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டும் என்றால்  உணவில் கொண்டைக்கடலையை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சைநிற காய்கறிகள் :

பச்சை நிற காய்கறிகளை உணவில் அதிகமாக சாப்பிட்டு வந்தால் தாய்மார்களுக்கு அதிகளவில் பால் சுரக்கும்.

பால் :

தாய்மார்கள் தங்கள் உணவில் வைட்டமின் டி சத்து அடங்கிய உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், பால், தயிர் சீஸ் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

நட்ஸ்  :

நட்ஸ்களில் மெக்னீசியம், இரும்புச்சத்து, புரதம் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

தானியங்கள் :

முழு தானியங்கள் தாய்ப்பால் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களை நன்றாக சுரக்கச் செய்யும். முழு தானியங்களை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

Previous articleபுதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..!
Next articleசத்தான ராகி லட்டு இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்! இன்னைக்கு ட்ரை பண்ணுங்க!