சத்தான ராகி லட்டு இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்! இன்னைக்கு ட்ரை பண்ணுங்க!

0
29
#image_title

சத்தான ராகி லட்டு இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்! இன்னைக்கு ட்ரை பண்ணுங்க!

பாரம்பரிய உணவுகளில் ராகி முக்கிய இடத்தை வகிக்கின்றது.இந்த சிறு தானியத்தில் அரிசியை விட 8 மடங்கு இரும்பு சத்து அடங்கி இருக்கிறது.இதில் நாம் தினமும் குடிக்கும் பாலுக்கு இணையான கால்சியம் சத்து இருக்கின்றது.பாஸ்பரஸ்,நார்ச்சத்து,புரதம் உள்ளிட்ட சத்துக்களை உள்ளடக்கியுள்ள ராகியை உணவாக எடுத்து வந்தோம் என்றால் இரத்த சோகை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.இந்த ராகியில் புட்டு,சப்பாத்தி,பூரி,அடை போன்ற பல உணவுகள் செய்து உண்டு வருகிறோம்.இந்நிலையில் இந்த ராகி மாவில் லட்டு செய்து குழந்தைகளுக்கு கொடுத்தோம் என்றால் அதனை விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1 கப்

வேர்க்கடலை – 1/4 கப்

நெய் – 1 தேக்கரண்டி

வெல்லம் – 1/2 கப்

செய்முறை:-

1.அடுப்பில் மிதமான தீயில் ஒரு கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி ராகி மாவை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் அளவிற்கு வறுக்க வேண்டும்.

2.வறுத்த ராகி மாவை ஒரு தட்டிற்கு மாற்றி வேண்டும்.

3.வறுத்த வேர்க்கடலை 1/4 கப் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

4.வறுத்து வைத்துள்ள ராகி மாவுடன் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடி மற்றும் அதனுடன் 1/2 கப் தூள் செய்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து கலக்க வேண்டும்.

5.நன்கு மிஸ் செய்த பிறகு அவற்றை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்.