தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்த சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ , சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள் இயக்கத்தின் தடையின்மை சான்று போன்ற உரிய அனுமதி பெறுவது அவசியமான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தமிழ்நாட்டில் மொத்தம் 162 தனியார் பள்ளிகள் முறையாக அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பள்ளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூடிய விரைவில் அந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் பெற உள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்தந்த பள்ளிகளின் மீது மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கம் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகின்றது.
மேலும் கடந்த ஆண்டு போராட்டமாக வெடித்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதி நடத்த அனுமதி பெறவில்லை என தகவல் வெளியானது. அந்த தகவல் உண்மை யெனில் அனுமதி பெறாமல் விடுதி நடத்தியதால் ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.