தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! இன்று அதன் விலை நிலவரம்!

0
234
#image_title

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! இன்று அதன் விலை நிலவரம்!

தங்கம் ஒரு ஆபரணப் பொருள் மட்டும் அல்ல. சிறந்த எதிர்கால முதலீடாக இருப்பதினால் தான் சாதாரண மக்களுக்கும் தங்களால் முடிந்த அளவிற்கு தங்கத்தை வாங்கி சேர்த்து வருகின்றனர்.

ஆனால் தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,870 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை இன்று சற்று குறைந்து இருக்கின்றது.

அதன்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,860க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.6,393க்கும், சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.51,144க்கும் விற்பனையாகி வருகிறது.

மேலும் வெள்ளி விலை மற்றமின்றி நேற்றைய விலைப்படி 1 கிராம் ரூ.78க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை சற்று குறைந்து இருப்பது சாமானிய மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கின்றது.