நர்சிங் மாணவி கொலை!! காதலனின் வெறிச்செயலால் பரபரப்பு!!

Photo of author

By CineDesk

நர்சிங் மாணவி கொலை!! காதலனின் வெறிச்செயலால் பரபரப்பு!!

CineDesk

Nursing student killed!! Excitement due to lover's madness!!

நர்சிங் மாணவி கொலை!! காதலனின் வெறிச்செயலால் பரபரப்பு!!

ஆஸ்திரேலிய நாட்டின் அடிலெய்டு நகரில் படிக்கும் இந்திய மாணவி ஜாஸ்மீன் கவுர் ஆவார். 21 வயதான இவர் செவிலியர் படிப்பை பயின்று வருகிறார்.

இவர் 2021 ஆம் ஆண்டு முதல் தாரித்ஜோத் என்பவரை காதலித்து வந்துள்ளார். பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

ஆனால் அவரின் காதலன் இவரிடம் பேச சொல்லி தொந்தரவு செய்து வந்துள்ளார். அப்போதும் ஜாஸ்மீன் அவரிடம் பேசாமல் இருந்திருக்கிறார். எனவே கோவமடைந்த ஜாஸ்மீனின் காதலன் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

எனவே அடிலெய்டில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்த ஜாஸ்மீனை தனது நண்பரின் காரில் கடத்தி சென்றுள்ளார். காரில் சுமார் 650 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜாஸ்மீனை கடத்தி சென்று, பிறகு பிளிண்டர்ஸ் எனப்படும் மலைப்பகுதியின் அருகே அவரின் கழுத்தை அறுத்து விட்டு கண்களை கட்டியபடி உயிருடன் கல்லறையில் புதைத்துவிட்டார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. எனவே காவல் துறையினர் தாரித்ஜோத் சிங்-இடம் விசாரித்த போது அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த வெறிச்செயலுக்கு இவருக்கு கண்டிப்பாக ஆயுள் தண்டனை அளிக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தற்போது பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.