ஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!!

0
28
#image_title

ஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!!

நாவீன காலத்தில் உணவு முறைகள் முற்றிலும் மாறிவிட்டது.இதனால் உடலில் பல விதமான நோய்கள் உருவாகும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இன்றைய கால உணவுகள் சுவையாக இருந்தாலும் அவை ஆரோக்கியமானதா? என்ற கேள்விகள் நம்மில் பலருக்கு தோன்றிருக்கும்.ஆரோக்கியமான உணவு முறை பழக்கம் இல்லையென்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பல வித பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.நாம் உண்ணும் காய்கறி,பழங்கள்,இறைச்சிகள்,பால் என்று அனைத்திலும் ரசாயனம் நுழைந்து விட்டது.இதனால் இவற்றை உண்பதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.

தற்பொழுது பிறக்கும் குழந்தைகளில் பாதி பேர் பல வித நோய்களுடன் தான் பிறக்கின்றன.இதனால் அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது நம் கடமை.முறையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.தானிய வகைகளை கொண்டு செய்யப்படும் சத்துமாவில் அதிகளவு ஊட்டச்சத்து இருக்கிறது.இதில் கஞ்சி செய்து குடித்தால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

*பச்சை பயறு – 1/2 கப்

*கருப்பு உளுந்து – 1/4 கப்

*கொள்ளு – 1/2 கப்

*அரிசி – 3 தேக்கரண்டி

*பொட்டுக்கடலை – 4 தேக்கரண்டி

*கோதுமை – 1/2 கப்

*ராகி – 1/2 கப்

*மக்கா சோளம் – 1/2 கப்

*வேர்க்கடலை – 1/4 கப்

*முந்திரி – 1/4 கப்

*பாதாம் – 1/4 கப்

*பிஸ்தா – 1/4 கப்

*ஏலக்காய் – 8

*சுக்கு பொடி – 2 தேக்கரண்டி

*கருப்பு சுண்டல் – 1/4 கப்

*கம்பு – 1/4 கப்

செய்முறை:-

1.அடுப்பில் கடாய் வைத்து அதில் ஏலக்காய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

2.பின்னர் அனைத்தையும் ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவேண்டும்.

3.பின்னர் ஆறவைத்துள்ள பொருட்கள் மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து கொள்ளவும்.

4.அரைத்த மாவை ஜல்லடை கொண்டு சலித்து ஒரு டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும்.

சத்துமாவு கஞ்சி காய்ச்சும் முறை:-

*ஒரு பாத்திரம் எடுத்து அதில் செய்து வைத்துள்ள சத்துமாவு பவுடர் 2 தேக்கரண்டி மற்றும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும்.தண்ணீருக்கு பதில் பால் கூட சேர்த்து கொள்ளலாம்.

*பின்னர் அடுப்பில் அந்த பாத்திரத்தை வைத்து கொதிக்க விடவும்.

*சுவைக்காக உப்பு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிண்டவும்.பச்சை வாசனை நீங்கிய பிறகு அடுப்பை அணைத்து விடவும்.இந்த முறையில் சத்துமாவு கஞ்சி செய்தால் குழந்தைகள் விரும்பி பருகுவார்கள்.