வீட்டை ஆக்கிரமைப்பு செய்துட்டாங்க நடவடிக்கை எடுங்கள்!  65 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி!

0
193
Occupy the house and take action! A 65-year-old woman tried to set fire to the district collector's office!
Occupy the house and take action! A 65-year-old woman tried to set fire to the district collector's office!

வீட்டை ஆக்கிரமைப்பு செய்துட்டாங்க நடவடிக்கை எடுங்கள்!  65 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி!

 தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி தற்போது பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி பகுதியில் வசித்து வருகின்றார் .இவருக்கு சொந்தமாக பெரியகுளம் தென்கரை அர்ஜுன தேவர் சந்து, தெற்கு புது தெரு பகுதியில் வீடு உள்ளது. மேற்படி வீட்டினை அதே பகுதியினை சேர்ந்த மகாலிங்கம் மகன் லோகநாதன் மற்றும் லோகநாதன் மகன் நாகராஜன் என்பவர் ஆகியோர் ஆக்கிரமிப்புசெய்யும் நோக்கோடு மேற்படி வீட்டினை இடித்து தரைமட்டமாக்கி கான்கிரீட் கட்டிடம் எழுப்பி வருகின்றார்.
இவற்றை தடுத்து நிறுத்த கோரி ராமலட்சுமி பல்வேறு அரசு துறை அலுவலர்களிடமும், காவல்துறையினிடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமது மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் நடவடிக்கை கிடைக்காத பட்சத்தில் வாழ வழியில்லாததால் தமது உயிரை மாய்த்துக்கொள்ள நேரிடும் என்றும் ராமலட்சுமி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமது உடலில் மண்ணென் யெய் ஊற்றி ஊற்றி தீக்குளிக்க முற்பட்டார்.தகவலறிந்து விரைந்து வந்த காவலர்கள் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது வீட்டினை ஆக்கிரப்பு செய்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ராமலட்சுமி கோரிக்கை
Previous articleகள்ளக்குறிச்சி மாணவி சம்பவத்தில் இரண்டு பேர் கைது! ஈரோடு போலீசார் விசாரணை!
Next articleதமிழக எம்பிக்கள் டெல்லியில் கைது! நடந்தது என்ன?