தமிழக எம்பிக்கள் டெல்லியில் கைது! நடந்தது என்ன?

0
129
Tamil Nadu MPs arrested in Delhi! what happened?
Tamil Nadu MPs arrested in Delhi! what happened?

தமிழக எம்பிக்கள் டெல்லியில் கைது! நடந்தது என்ன?

நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள் கைமாறியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதில் அந்த சொத்துக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இது குறித்து வழக்கு தொடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8 ஆம் தேதி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

With Sonia Gandhi Set to Appear Before ED for Questioning, Congress to Stage Protests

இதனைத்தொடர்ந்து ஜூலை 21 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சமன் அனுப்பி இருந்தது. இதை ஏற்றுக் கொண்ட சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார்.

இதே நேரத்தில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் இந்த விசாரணையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து டெல்லியில் நடந்த இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.