கொடுத்த கடனை திருப்பிக்கேட்டா, கத்திக்குத்து!! முதியவரை கொன்ற மூர்க்கன்!!

Photo of author

By Jayachithra

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டா, கத்திக்குத்து!! முதியவரை கொன்ற மூர்க்கன்!!

Jayachithra

தற்போதைய காலகட்டத்தை பொருத்தவரை கடன் வாங்கிவிட்டு அதனை செலுத்த முடியவில்லை என்று வருத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, கடன் கொடுத்தவர்களும் உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

ஆனால் எளிய நிலையில் இருக்கும் மக்கள் கடனை கொடுக்க இயலாத நிலையில் இருந்தாலும் கூட கடனை கொடுக்க விருப்பமில்லாமல் பல பணமுதலைகள் கொலை செய்து விடவும் தயங்குவதில்லை. அதுபோல தற்போது கடன் கொடுத்துவிட்டு திருப்பி கேட்ட முதியவர் ஒருவரை கர்நாடக மாநிலத்தில் கொலை செய்த சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் பகுதியிலுள்ள சமுத்திர வள்ளி கிராமத்தில் 60 வயதான தாசேகவுடா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருபவர் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்பு கவுடாவிடம் கிரன் என்ற 26 வயது இளைஞர் 5 லட்சம் ரூபாயை கடனாக பெற்று உள்ளார்.

இந்தப் பணத்தை அவர் குறித்த நேரத்தில் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். கௌடா தொடர்ந்து கிரணிடம் இந்த பணத்தை கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். ஆனால் மது பழக்கம், கிரிக்கெட் சூதாட்டம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு அடிமையான கிரணால் இந்த பெரிய தொகையை திருப்பிக் கொடுக்க இயலவில்லை.

மேலும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்த கவுடாவையும் அவரால் சமாளிக்க முடியவில்லை. எனவே பணம் கொடுத்தவரை கொலை செய்து விட்டால் நாம் பணம் கொடுக்க வேண்டியதில்லை தப்பித்துவிடலாம் என்று எண்ணிய கிரண் பணம் கொடுத்தவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அந்தத் திட்டத்தின்படி, கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தன்னுடைய நிலத்தில் இருந்த பொழுது கடன் கேட்க வந்த தவரை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.

பின்னர் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையின் பேரில் கைது செய்யப்பட்டார்.