இது ஒரு கிளாஸ் குடிச்சா போதும்!! அல்சர் குணமாகும்!!

0
397
#image_title

அல்சர் பிரச்சினை என்பது பொதுவாக எல்லோருக்கும் இருக்க கூடியது. இது எதனால் ஏற்படுகிறது என்றால் சரியாக சாப்பிடாமல் இருப்பது, அதாவது காலை நேர உணவை தவிர்த்தல், புகை பிடித்தல், அதிக காரமுள்ள உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால் அல்சர் உண்டாகிறது.

அல்சர் இருப்பதால், நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், பசியுணர்வு இல்லாமல் இருத்தல், கொஞ்சம் சாப்பிட்ட உடனே வயிறு நிறைந்தது போல் தோன்றுவது போன்றவை அல்சரின் அறிகுறிகளாகும். இந்த அல்சர் எனும் வயிற்று புண் ஆறுவதற்கு எளிய வீட்டு வைத்திய முறையை பார்க்கலாம்.

1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வெந்தயம் குளிர்ச்சியாகவும், கசப்புத்தன்மை கொண்டதாகவும் இருப்பதால் வயிற்று புண் ஆற உதவி செய்கிறது.

அடுத்ததாக 1/2 கப் அளவிற்கு மோர் எடுத்து கொண்டு அதில் 1/2 எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். அடுத்து துளசி இலை சாறு 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளவும். துளசி இலையை வெறுமனே மென்று சாப்பிட்டால் கூட வயிற்று புண் ஆறிவிடும்.

மேலே கூறிய இந்த மூன்று பொருட்களையும், 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இதில் சிறிதளவு சீரகம் சேர்த்து குடித்து வரவும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.

Previous articleஇது 1 சுளை இருந்தால் ஆயுசுக்கும் உங்களுக்கு எலும்பு பிரச்சினை வாராது!!
Next articleகடகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கொடுத்த வாக்குகளை காப்பாற்றி மிகவும் நாள்!!